மனச்சோர்வூம் மதுபோதைக்கு அடிமையாதலும்

          திரு. விக்கிரமசிங்க என் முன்னால் அமர்ந்திருக்கின்றார். அவரது தோற்றம் என்னுள் கவலையை ஏற்படுத்துகின்றது.  அவரது தலைமயிர் கலைத்நிருக்கின்றது. ஆடைகள் கசங்கியிருக்கின்றன. அவரது விரல் நுனிகள் நடு நடுங்குகின்றன. வீங்கிய கண்ணங்களும் சிவந்த கண்களும் அவருக்கும் மதுபானத்திற்கும் இடையிலான நீண்ட தொடர்பைக் காட்டுகின்றன.

டெக்டர் தெரியூமா மனச்சோர்வூ னநிசநளளழைn மிக மோசமானது. அது ஏற்பட்டால் எதையூம் செய்ய மனம் வராது. துhக்கம் வராது. சாப்பிட முடியாது. சாகத்தான் நினைக்கும். டொக்டருக்குத் தெரியாது மனச்சோர்வூ தான் மிகமோசமானது.” அவர் திரும்பத் திரும்ப முனகிக் கொண்டிருந்தார்.

நான் ஏற்றுக் கொள்கின்றேன். கடந்த காலத்தில் நான் அறிந்திருந்த விக்கிரமசிங்க அல்ல இவர். விக்கிரமசிங்க மிகத்திறமையான ஒரு வயலீன் வித்துவான்;. அந்த நாட்களில் அவர் மதுபானம் அருந்துபவர் அல்ல. அவர் மதுபானம் அருந்துவது பற்றி அறிந்து கொண்ட  நான் அது பற்றி அவரிடம் விசாரித்தேன். “ இல்லை டொக்டர் இப்படித்தானே. நாங்கள் நிகழ்ச்சிகளுக்குப் போனால் சில இடங்களில் காசு கிடைக்காது. குடிக்கத்தான் தருவார்கள். குடிக்காவிட்டால் காசும் இல்லை. குடியூம் இல்லை.” என அவர் சிரித்துக் கொண்டே சொன்னது எனக்கு இன்று போல் ஞாபகத்தில் உள்ளது.

சிறிது சிறிதாக அவரது குடிப்பழக்கம் அதிகரித்தது. இறுதியில் அவர் நாள் முழுதும் குடிப்பதாக நான் அறிந்தேன்.

மனச்சோர்வூ ஆரம்பித்தது அண்மையிலா?” நான் கேட்டேன். “இல்லை டொக்டர்இ குடிக்க ஆரம்பித்து சில காலத்தின் பின்னர் மனச்சோர்வூ ஆரம்பித்தது. முதலில் எனக்கு அது விளங்க வில்லை. தூக்கம் வராது. சாப்பிட மனம் வராது. சாவது நல்லது என்று நினைக்கும். ஒரு நாள் நான் களணி ஆற்றில் குதித்து விட்டேன். அருகில் இருந்தவர்கள் என்னைக் காப்பாற்றி எடுத்து மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கே தான் எனக்கு மனச்சோர்வூ ஏற்பட்டுள்ளதாக அறிந்து கொண்டேன்;”.

மதுபானத்திற்கும் மனச்சோர்வூக்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு நிலவூகின்றது. தற்கொலை செய்து கொள்ளும் போக்கு மதுபானம் அருந்துபவர்கள் மத்தியில் அதிகம் என அறியப்பட்டுள்ளது. மதுபானம் மூளையின் இரசாயனங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தி மனச்சோர்வை ஏற்படுத்துவதற்கான வாய்பை அதிகரிக்கும் என உள மருத்துவர்களின் றௌயல் சங்கம் அறிவிக்கின்றது.

மதுபான பாவனைக்கும் மனச்சோர்வூக்கும் இடையே இரண்டு விதமான தொடர்புகள் நிலவூகின்றன. மதுபானத்தினால் மனச்சோர்வூ ஏற்படல் ஒன்று. மற்றையது மனச்சோர்வூ காரணமாக மதுபானப் பழக்கம் அதிகரித்தல்.” என அச்சங்கம் மேலும் அறிவிக்கின்றது.

அப்படித்தான் டொக்டர் நடந்தது. குடிக்க ஆரம்பித்த பின் மனச்சோர்வூ ஆரம்பித்தது. பிறகுகுடியை விட்டேன். அப்போதும் மனச் சோர்வூ ஏற்பட்டது. அவ்வாறான சமயத்தில் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கின்றேன். மனச்சோர்வூ உள்ளபோது அதிகமாக குடிக்கின்றேன்.”  

மனச்சோர்வூ காலத்திற்கு காலம் ஏற்பட்டு இல்லாமற் போகின்ற ஒரு நோயாகும். ஒரு முறை ஏற்பட்டவூடன் சிகிச்சை செய்யாதிருந்தால் 6 – 9 மாதங்களில்; படிப்படியாக இல்லாமற் போய் விடும். பின்னர் நோயாளி சரியான நிலையை அடைவார். மீண்டும் சில காலத்தின் பின்னர் மனச்சோர்வூ ஏற்படும்.

குடிப்பழக்கத்தைக் கைவிட்டு விட்டு மருந்தெடுக்க ஆரம்பித்து சில நாட்களில் மனச்சோர்வூ இல்லாமற் போய் விட்டது. அதனால் சிகிச்சையை நிறுத்தி விட்டேன். அடுத்த வருடம் மீண்டும் முன்னரைப் போல நோய் ஆரம்பித்தது.”

சிகிச்சை ஆரம்பித்த சில காலத்தில் மனச்சோர்வூ இல்லாமற் போய்விடும். எனினும் மருத்துவர் கூறும் வரை மருந்துகளைத் தொடர வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மீண்டும் மனச்சோர்வூ ஏற்படுவதைத் தடுக்க முடியூம்.

குடிப்பழக்கத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் டொக்டர். அதனால் வீட்டிலும் பிரச்சினை. வேலை செய்யூம் இடத்திலும் பிரச்சினை.”

மதுபழக்கத்தினால் வாழ்க்கையின் அழுத்தங்கள் அதிகரிக்கும். ஞாபகம் குறைவடையூம்;இ பாலியல் குறைபாடுகள்; ஏற்படக் கூடும். அதனால் குடும்பத்தில் சச்சரவூகள் மற்றும் பாலியல் பிரச்சினைகள் ஏற்படக் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிதைவடையூம் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படும்.” இவ்வாறு உளவியல் மருத்துவ றௌயல் சங்கம் கூறுகின்றது. 

விக்கிரமசிங்க போன்று குடிப்பழக்கத்தை கைவிட முயற்சி செய்பவர்களின் சங்கம் ஒன்று எங்கள் மருத்துவ மனையில் செயற்படுகின்றது. நாங்கள் அதனை யடஉழாழட பசழரி என்கின்றௌம். அவர்கள் வாரந்தம் ஒன்று கூடி அவர்களது பிரச்சினைகள் பற்றி மருத்துவர் ஒருவரின் தலைமையில்  கலந்துரையாடுவார்கள். விக்கிரமசிங்கவூம் அதில் கலந்து கொள்ள வர முடியூம். வாருங்கள் முயற்சி செய்தால் குடிப்பழக்கத்தைக் கைவிடலாம்.”

நண்பர்கள் சகவாசம் அல்லது வைபவங்களில் நண்பர்களுடன் மதுபானம் அருந்துதல் மூலம் பெரும்பாலானவர்கள் மதுபானத்திற்கு பழக்கப்படுகின்றார்கள். பின்னர் படிப்படியாக அவர்கள் அருந்தும் மதுபானத்தின் அளவை அதிகரிப்பார்கள். அதன் பின்னர் குடித்தல் அவர்களது ஒரு நாளாந்த நடவடிக்கையாகி விடும். அதன் உச்ச நிலையின்போது காலையில் எழுந்தது முதல் மதுபானம் அருந்த ஆரம்பித்து விடுவார்கள். அவ்வாறில்லையாயின் உடல் நடுக்கம்இ தூங்க முடியாமைஇ ஆகியன அவர்களுக்கு ஏற்படும்.  

மனச் சோர்வினால் துன்புறுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மதுபாவனை காரணமாக இந்நிலையை அடைவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மனச் சோர்விற்காக மருத்துவ சிகிச்சைகளும் உளவியல் சிகிச்சை முறைகளும் உள்ளன. மருந்து உபயோகிக்கும் சந்தர்ப்பத்தில்; குடியைத் தொடருவதனால் மருந்தின் செயற்பாடு குறைவடையூம். அதற்கான சான்றுகள் உள்ளன. மதுபானத்திற்கு அடிமையானவர்கள் அதன் மீதான கடுமையான ஆசையைக் கட்டுப்படுத்த மருத்துவ பரிகாரங்கள் உள்ளன.

மதுபானத்திற்கு அடிமையாதல் மனச்சோர்வூக்கு ஆளாதல் ஆகிய இரண்டும் சில குடும்பங்களில் அதிகம் என ஆய்வூகளின் மூலம் அறிய முடிகின்றது. இதற்குக் காரணம் இவை இரண்டிற்கும் காரணமாகும் பொதுவான பரம்பரை அலகுகள் இருத்தல் என ஆய்வாளார்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பரம்பரையலகு காரணிகளுக்கு மேலதிகமாக சிறுவயதில் து~;பிரயோகங்களுக்கு ஆளாதலும் மதுபானத்திற்கு அடிமையாதல் மற்றும் மனச்சோர்வூக்காளாதல் ஆகிய இரண்டுக்கும் காரணமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மதுபானமின்றி நாளைக் கழிக்க முடியாவிட்டால் அல்லது உங்கள் குடும்பஇ சமூக செயற்பாடுகளில் ஈடுபடல் சிரமமானதாக இருந்தால்; அல்லது தொழில் செய்யூம் இடத்தில் சிரமங்களை எதிர் நோக்குவீர்களாயின் நீங்கள் மதுபானம் தொடர்பான பிரச்சினையான நிலைமைகளைக் கொண்டுள்ளீர்கள்.

மதுபான பாவனைஇ மனச்சோர்வூ ஆகிய இரண்டும் உங்களால் கவனிக்காது விட முடியாத  பாரதூரமான பிரச்சினைகளாகும். உங்களுக்கு இவை இரண்டும் அல்லது இவற்றில் ஒன்று இருக்குமாயின் தகைமையூள்ள மருத்துவர் ஒருவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

 

மருத்து கலாநிதி புத்திக அபேரத்ன.

 

 

 

 

You may also like...