தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர்இ விரிவூரையாளர்களுக்கு ஒரு விண்ணப்பம்

இவ்வாசிரியர் சமீபத்தில் இந்தியாஇ இலங்கை ஆகிய நாடுகளுக்கு பிரயாணம் செய்ததன் விளைவாக இக்கட்டுரையை எழுதும்படி தூண்டப்பட்டார். மிகச்சிறந்த மரபார்ந்த அருஞ் செல்வமும் அளந்தறிய முடியாத கீழ்த்திசைப் பண்பாட்டு விழுமியங்களும் இன்றும் பேணப்படும் அதேவேளை சில தீமை தரும் செயன்முறைகளும் இந்நாடுகளின் விரைவான பொருளாதார சமூக அபிவிருத்தியை தடுத்து நிற்கின்றன. இவற்றை வெல்ல வேண்டுமானால் கல்வி மூலமே சாதிக்கலாம். ஆகவே இச் சிறு கட்டுரையை ஆசிரியர்களுக்கும் விரிவூரையளர்களுக்கும் சமர்பிக்கின்றேன். இங்கு எடுத்துக்காட்டிய விடயங்கள் உலகளவில் சமவலிமையூடையனவாகவே காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் பயணம்செய்தபோது உங்கள் கண்ணிற்கு புலப்படும் முதல் விடயம் வீதி ஒழுங்கு சிறிதும் இல்லாத நிலையூம் காற்று மாசடைதலும் மிக மோசமான வறுமையூமாகும். கட்டுப்பாடற்ற வீதி முறையால் போக்குவரத்து தடைப்படல்இ நிற்கும் வாகனங்கள் தேவையற்ற ஒலிஎழுப்பி (ஹோர்ன்) மக்களின் குருதியமுக்கத்தை கூட்டுதல் எங்கும் காணக்கூடியதாயிற்று. காற்று மாசுபடுதலானது கூடியளவூ வாகன பாவனையால் வெளிப்படும் புகைஇ தரமற்ற எண்ணெய் பாவனைஇ கரியின் பாவனை போன்றவற்றால் ஏற்படுகிறது. வடஇந்திய நகரங்களில் வறியவர்கள் குளிர்காய்வதற்காக வீதியோரங்களில் இறப்பர் டயர்களை எரிப்பதும் காரணமாகும். மும்பைஇ டெல்லி நகர வீதிகளால் போகும்போது வீதியில் விழுந்து காணப்படும் மரத்தின் சருகுகளின் மேல் மாசுபட்ட காற்றினால் கறுப்பு படலம் காணப்படும். ஏழைகளும் செல்வந்தர்களும் இதே காற்றைத்தானே சுவாசிக்கிறார்கள் என்பதும் இதனால் சுவாசப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன எனும் இந்த உண்மை மக்களிற்கு விளங்கவேண்டும். காற்றில் மாசின் விகிதம் மிக மிக அதிகமாக காணப்படுவதால் டெல்லி போன்ற நகரங்களில் அதிக விமான பயணங்கள் ஏற்படும் நேரங்களில் புகைஇ மூடுபனி காரணமாக நூற்றுக்கணக்கான விமானப்பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றன. ஆகவே இவ்வாறன பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி? இது சரியான கல்வி மூலமும் சரியான முடிவெடுக்கும்திறமைஇ நல்ல தொடர்பாடல்இ கடுமையான சட்டங்கள் மூலம் பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே தண்டனை வழங்கினால் மட்டுமே தீர்க்கப்படலாம்.
இது எனக்கு 1950 களில் Sheffield ககநைடன நகரில் இருந்த நிலையை நினைவூ+ட்டுகின்றது . உருக்கு கைத்தொழிலில் அதிகம் நிலக்கரியை பயன்படுத்துவதால் நகரத்தின் முழுக் கட்டடங்களும் கருமையாகவூம் காற்று தூசு நிரம்பியதாகவூம் இருந்தது. அதிகாரிகள் சரியான முடிவூகளை கைக்கொண்டு அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்தி மாசுற்ற நகரத்தை சுத்தப்படுத்தினர். வலுமிக்க பொதுசன போக்குவரத்தை ஏற்படுத்தினர். ஆறுகளை எல்லாம் அசுத்தம் நீக்கினர். மரங்களை நட்டனர். கரி எரிப்பதை தடைசெய்தனர். இன்று ளுhநககநைடன ஐரோப்பவிலுள்ள சுத்தமான பசுமையான நகரங்களுள் ஒன்றாயிருக்கின்றது. இப்போது 02 அல்லது 03 நிலக்கரி சுரங்கங்களே உள்ளன. முன்னர் ஐக்கிய இராச்சியம் முழுவதும் 600 இற்கும் மேற்பட்ட சுரங்கங்கள் இருந்தன.

ஆகவேஇ தெற்காசிய பிரதேசத்தை பாதிக்கின்ற செயற்பாடுகளை எவ்வாறு நாம் வெற்றி கொள்ளலாம்? இதன் பெரும்பொறுப்பு கல்விமான்கள் மீதும் சட்டம் இயற்றுவோர் மீதுமே உள்ளது. கல்விமூலமாக ஆசிரியர்கள் மற்றும் விரிவூரையாளர்களால் முழு மக்கள் தொகையினரையூம் வழிகாட்ட முடியூம். கல்வியியலாளர்கள் சட்டம் ஆக்குவோருடன் கைகோர்த்து சமாந்தரமாக மிதிவண்டி ஓட்டுவதுபோல பயணிக்க வேண்டும். அரசியல் தலைவர்களுடனும் கொள்கை வகுப்பாளர்களுடனும் ஒன்றிசைந்து சரியான உட்கட்டமைப்புகளையூம் கொள்கைகளையூம் சட்டவாக்கத்தையூம் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களிற்கு கற்பித்து அவர்கள் உட்கட்டமைப்பை கூடிய பொறுப்புணர்ச்சியூடன் பிரயோசனப்படுத்தல் வேண்டும். தேவையான வலு பாதுகாப்பான சுதேச பசுமை மூலங்கள் மூலம் உண்டாக்கப்பட வேண்டுமேயன்றி சு+ழலை மாசுபடுத்தும் ஆபத்தான நிலக்கரி இ எண்ணெய் போன்ற எரிபொருட் பாவனையை தவிர்க்கவேண்டும்.
அப்படியானால் இதில் ஏன் எவரும் முயற்சி எடுக்கவில்லை? நான் பங்குகொண்ட பல மகாநாடுகள் இ கூட்டங்களின் மூலம் பெரும் கவலையே அடைந்துள்ளேன். பல்வேறு துறைகளில் எமது அறிவை பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் இவற்றுள் பெரும்பாலான கூட்டங்கள் ஒழுங்கற்றஇ திட்டமிடப்படாதவைகளாய் பேசுவோருக்கும் பங்குபற்றுவோருக்கும் பயனின்றி முடிந்தன. அடிப்படை பண்புகள்இ சமுதாய ஆசார முறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனால் இப்படியான கூட்டங்களால் பெறக்கூடிய முழுமையான நன்மைகளையூம் பெறமுடியாமல் போகின்றது. பேசுவோரும் கேட்போரும் நோக்கத்தினை வீணாக்குகின்றனர். பேச்சாளர்கள் ஒரு முக்கியமான விடயம்பற்றி பேசுகின்றபோது கைத்தொலைபேசியில் உரத்த தொனியில் உரையாடுதல் பேச்சாளர்இ கௌரவ விருந்தினராய் மேடையில் இருப்போருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. வருகைதந்தோர் தம்முட்பேசுகின்றனரே அன்றி பேச்சாளர் உரையை கேட்டு பயன்பெறுவதில்லை. உரையாற்றுவோரின் அனுபவ ஞானம் காற்றில் போகின்றது. பலர் மண்டபத்தில் நடமாடுவதும் பேச்சாளரை குழப்புவதுமாக இருப்பர். மேசையில் இருக்கும் கனவான்கள் கூட பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போது தம்முள் உரையாடுவார். கல்வி – அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற ஒரு சு+ழலில் இத்தகைய வேண்டத்தகாத செயல்கள் தவிர்க்கப்படல் வேண்டும். முதலில் கல்விமான்கள் சிறந்த நற்பழக்கங்களை கொண்டிருப்பதுடன் இளம் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக (சுழடந அழனநட) திகழல் வேண்டும். இவை கடைப்பிடிக்கப்பட்டால் அறிவை பகிர்வதும் பிறருக்கு வழிகாட்டுவதும்மிக சுலபமாகிவிடும். இந்த ஆக்கத்தின் மூலம் இத்தேச கல்வியியலாளர்கள் மற்றும் விரிவூரையாளர்களிட்கு கூறப்படுகின்ற விடயமாவதுஇ ஒரு சிறந்த திட்டசெயற்படுத்தல் மூலமும் தொடர்பாடலை மேம்படுத்துவதனூடும் தொழில் ரீதியாக அனைவரது பங்களிப்பினையூம் வழங்கி எம்- தேசத்தை அபிவிருத்தி செய்து உயர்ந்த நிலைக்கு கொணர்தல் வேண்டும் என்பதாகும்.

 

பேராசிரியர் ஐ. எம். தர்மதாச

Sheffield Hallam University, Sheffield S1 1WB United Kingdom

மொழிப்பெயHப்பு : திருகுமாHகுமாH

You may also like...