கொழும்பு மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தம்.

கொஸ்லந்தைஇ மீறியபெத்தைஇ கொத்மலை மற்றும் அரனாயக்க ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவூ அனர்த்;தங்களின்  ஞாபகங்களை இன்னும் தமது நினைவில் வைத்திருக்கும் இலங்கை மக்களுக்கு நிலச்சரிவூ ஒரு புதிய அனுபவமல்ல. எனினும் 2017 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி புது வருட கொண்டாட்டங்களில் முழு நாடும் மூழ்கியிருந்த வேளையில் கொலன்னாவைஇ மீதொடமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்த நிலச்சரிவானது இந்நாட்டில் அவ்வாறான அனர்த்தமொன்று நடைபெற்ற முதற் சந்தர்ப்பமாக அமைந்தது  மாத்திரமல்லாது ‘குப்பைக்கும் மனிதனுக்கும்’ இடையிலான பூசலைப் பற்றி மீண்டும் எங்களைச் சிந்திக்கவூம் துhண்டு கோலாகியூள்ளது.

அவ்விபத்தின்போது 246 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1059 நபர்கள்; விபத்துக்;காளானதாகவூம் 32பேர் உயிரிழந்ததாகவூம் 11 பேர் காயமடைந்ததாகவூம் 8 பேர் காணாமற் போனதாகவூம்;  அறிக்கை செய்யப்பட்டுள்ளது. 80 வீடுகள் முழுமையாகவூம் 17 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இங்கு அனுதாபகரமான நிகழ்வூ யாதெனில்; மேற்படி மக்கள் சாதாரண மண்ணில் புதையூற வில்லை என்பதும் அவர்கள் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட ஒரு குப்பை மேட்டில் புதையூண்டார்கள் என்பதுமாகும். அம்மக்கள் குப்பை மேட்டின் அடிவாரத்திற்குச் செல்லவில்லை என்பதும் குப்பை மேடு அவர்களுக்கருகில் உருவாக்கப்பட்டது என்பதுமாகும்.

1990 இற்கு முன்னர் மீதொடமுல்iயில்  அமைந்த ‘பொதுவில் வயல் வெளி’ தாழ்ந்த ஒரு சதுப்பு நிலமாக விருந்தது. அங்கு அடுக்கு மாடி வீடமைப்புத்திட்டமொன்றை உருவாக்கும் நோக்கத்துடன் குப்பைகளை கொட்டி மேட்டு நிலமாக மாற்றும் நடவடிக்கை 1991 இல்  ஆரம்பிக்கப்பட்டது. காலஞ் செல்லச் செல்ல அங்கு கொட்டப்பட்ட குப்பைகளின் அளவூ அதிகரித்த அதே சமயம்இ 2009 இல் உயர் நீதிமன்ற கட்டளையின் மூலம் கொழும்பு பு@மென்டல் குப்பை மேடு மூடப்பட்டதுடன் கொழும்பு நகரத்தின் குப்பைகளைக் கொட்டும் முக்கிய இடமாக மீதொடமுல்லை குப்பைமேடு மாறியது.

பிரதேச மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எவ்வளவூ நடைபெற்ற போதிலும் தொடர்ந்தும் குப்பைகளைக் கொட்டும் இடமாக விளங்கிய மீதொடமுல்லை குப்பைமேடுஇ சரிந்த வேளையில்  78000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டதாகவூம் 45 – 50 மீற்றர் உயரமுடையதாகவூம் இருந்தது. தினமும் அங்கு கொட்டும் குப்பைகளின் அளவூ 800 – 900 தொன்கள் எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் குப்பைமேடு சரிந்ததற்கான காரணம் பற்றி விளக்க பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்ட அதே சமயம் குப்பை மேட்டில்;; மெதேன் வெடிப்பு ஏற்பட்டது என்பதும் ஒன்றாகும். எனினும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடாத்திய விரிவான ஆராய்ச்சியின் பின்னர் விபத்திற்கான காரணம் அதுவல்ல என உறுதியானதுஇ கடும் மழை ஏற்படுவதற்கு முன்னர் குப்பை மேடு அதன் எல்லைச் சமநிலையில் இருந்துள்ளது. மழைநீர் கசிவடைந்தமையால் குப்பை மேட்டிற்கு மேலதிக சுமை ஏற்றப்;பட்டுள்ளது. அதனால் குப்பை மேட்டிற்கு கீழ் உள்ள மண்படை ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டுச் சென்ற அதே சமயம் அதற்குச் சார்பாக வீடுகளின் கீழ் உள்ள தரைப்பகுதி மேல் எழுந்து வீடுகள் உடைந்து விழுந்துள்ளன. அத்துடன் சம நிலையை இழந்த  குப்பை மேட்டின் சரிவான பகுதி வீடுகள் உள்ள பக்கத்தின் மீது  உடைந்து விழுந்துள்ளது.

துக்ககரமான இந்நிகழ்வாக விருந்த போதிலும் பல வருடகாலமாக கவனியாது விடப்பட்ட பிரச்சினையொன்றின் மீது சகல தரத்தவர்களினதும் பார்வையைத் திருப்பப் போதுமானதாக அமைந்தது. இந்நிகழ்வூடன் மீதொடமுல்லையில் கழிவூகளைக் கொட்டும் நடைமுறை அரசாங்கத்தினால் உடனடியாக நிறுத்தப்பட்ட போதிலும் மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர வேறொரு நிலையான தீர்வொன்று இதுவரை முன்வைக்கப் படவில்லை.

“கொழும்பின் குப்பைகள் எங்களுக்கு வேண்டாம்” என்ற கோ~த்துடன் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து எதிர்பலைகள் எழுந்துள்ள அதே சமயம் இதுவூம் புதியதொரு கழிவூ முகாமைத்துவத் திட்டமொன்றை உருவாக்கத் தடையாக அமைந்துள்ளது.  இக்குப்பைக்கூளங்கள் பெயரளவில்  கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவையாக விருந்த போதிலும் அவை பெரும்பாலும் தமது பல்வேறு தேவைகளுக்காகவூம் நாளாந்தம் கொழும்புக்கு வருகின்ற மக்களினால் உருவா கின்றவையாகும். ஆகவே அவற்றை கொழும்பின் குப்பைகள் என்றழைப்பது எந்தளவிற்குப் பொருத்தமானது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கிய விடயமாகும். ஏனெனில் நாளாந்தம் ஒரு மில்லியன் மக்கள் கொழும்பை நோக்கி வருகின்ற போதிலும் கொழும்பில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 650 000 பேர் மாத்திரமாகும்.

எவ்வாறாயினும் ஒருவரை நோக்கி ஒருவர் விரல்களை நீட்டியபடி குற்றஞ் சாட்டுவதை  நிறுத்துவதற்கும் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திலிருந்து பாடம் கற்று அதனுhடாக நிலையான கழிவூ முகாமைத்துவச் செயன் முறையொன்றை அடைவதற்காகச் சகல தரத்தவர்களும் ஒன்று சேருவது கட்டாயமாகும். நாடு நீலப் பச்சை யூகத்தை நோக்கி செல்கின்ற இக்கால கட்டத்தில் இப்பணியை வெற்றியடையச் செய்வதற்காகச் சகல மக்களினதும் மனப்பாங்கு மாற்றம் தேவைப்படுகின்றது.

சிறான் சாம்பிக வீரதுங்க

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்.

You may also like...